பாபநாசம் கோயிலில் நாளை கும்பாபிேஷகம்

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி கரையில் அமைந்துள்ளது உலகம்மை சமேத பாபநாச சுவாமி கோயில். நவகைலாய தலங்களில் முதன்மையானது. ரூ.5 கோடி மதிப்பில் கோபுரம், சுவர்கள், கூரை ஆகிய திருப்பணிகள் நடந்தன.பழமையான இக்கோயிலின் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் மே 1ல் துவங்கியது.

கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர் என்பதால் கோயில் முன் உள்ள சாலையில் இந்த ஆக்கிரமிப்பு இடிபாடுகள் அகற்றப்பட்டன. இன்றும், நாளையும் அந்த வழியே பாபநாசம் அகஸ்தியர் அருவி மற்றும் பாபநாசம் அணை மற்றும் மலைப்பகுதிக்கு செல்வதற்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement