பெண் அமைச்சருக்கு அலைபேசியில் தொல்லை: கல்லூரி மாணவர் கைது

15


புனே: மஹாராஷ்டிராவில் பெண் அமைச்சருக்கு அலைபேசியில் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் பொறியியல் கல்லூரி மாணவரை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

மஹாராஷ்டிரா மாநில பா.ஜ., முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அமைச்சரவையில் சுற்றுச்சூழல் அமைச்சராக இருப்பவர் பங்கஜா முண்டே(45), இவரது அலை பேசி வாயிலாக கடந்த சில நாட்களுக்காக மர்ம நபர் அடிக்கடி அழைத்து தொல்லை கொடுத்துள்ளார். குறுஞ்செய்தியும் அனுப்பி வந்துள்ளதாக கூறப்படுகிறது.


இது குறித்து சைபர் குற்றப்பிரிவில் பெண் அமைச்சர் தரப்பு அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரின் அலைபேசி எண் , இருப்பிடம் குறித்து விசாரித்ததில் அந்த நபர் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த அமோல் சங்கான்ராவ் காலே என்ற 25 வயது பொறியியல் கல்லூரி மாணவர் என்பது தெரியவந்தது.
அந்த மாணவரை புனே அருகே பதுங்கியிருந்த போது கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement