மொபட் மீது பஸ் மோதி விபத்து கணவன் கண்முன் மனைவி பலி

துாத்துக்குடி:மொபட் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில், கணவர் கண் முன்னே மனைவி பலியானார்.

துாத்துக்குடி அருகே புதுக்கோட்டை, செல்வம்சிட்டியை சேர்ந்தவர் நயினார், 65. இவர், நேற்று தன் மனைவி பேச்சியம்மாள், 61, என்பவருடன் டி.வி.எஸ்., எக்ஸ்.எல். சூப்பர் மொபட்டில் திருநெல்வேலி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

மங்களகிரி விலக்கு அருகே சென்றபோது, துாத்துக்குடியில் இருந்து பயணியருடன் திருநெல்வேலி நோக்கி சென்ற தனியார் பஸ் மோதியது.

இருவரும் துாக்கி வீசப்பட்ட நிலையில், பேச்சியம்மாள் உயிரிழந்தார். நயினார் துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். புதுக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement