குப்பையில் வீசப்பட்ட தபால்கள் தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பு

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கழுகுமலையில் சுண்ணாம்புகளவாசல் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மின்கம்பத்திற்கு கீழ் மக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டிய தபால்கள் நேற்று குப்பையில் சிதறி கிடந்தன. அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
திருச்சி, விழுப்புரம், நாலுமாவடி, செவல்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து, மக்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டிய தபால்கள் என, தெரியவந்தது.
அப்பகுதி மக்கள் தபால் நிலையத்தில் தகவல் கொடுத்தும் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்தனர்.
இதற்கிடையே, அந்த தபால்கள் அனைத்தும் திடீரென தீயிட்டு கொளுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சம்பந்தப்பட்ட கழுகுமலை தபால் நிலைய அதிகாரிகள் கூறுகையில், 'தபால்கள் குப்பையில் கிடப்பதாக எங்களுக்கு புகார் வந்தது. நாங்கள் அங்கு சென்று பார்ப்பதற்குள் தீயில் எரிந்த நிலையில் இருந்தது. உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
மேலும்
-
பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே பெரிய அச்சுறுத்தல்; பிரதமர் மோடி பேச்சு
-
பதற்றத்தில் தடுமாறும் பாகிஸ்தான்; ஏவுகணை சோதனை நடத்தி சமாளிப்பு!
-
ராஜஸ்தானில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 6 பேர் கைது
-
அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்: மே 5, 6 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
-
இந்தியா போர் தொடுத்தால்.., பாகிஸ்தான் ராணுவ கமாண்டோக்கள் சொன்னது என்ன ?
-
என்னை கொலை செய்ய சதி; மீனாட்சி சுந்தரேஸ்வரர்தான் காப்பாற்றினார்: மதுரை ஆதினம் அதிர்ச்சி