தொழிற்சாலைகளுக்கு இடையேயான கிரிக்கெட் ஓசூர் டி.வி.எஸ்., நிறுவன அணி சாம்பியன்
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காவேரி மருத்துவமனை மற்றும் ஓசூர் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் ஆகியவை சார்பில், தொழிற்சாலைகளுக்கு இடையேயான, 6 ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடந்தது. 48 தொழிற்சாலை அணிகள் விளையாடின. இறுதி போட்டியில் டி.வி.எஸ்., அணியும், எம்.பிளாஸ்டிக் அணியும் மோதின.
இதில் டி.வி.எஸ்., நிறுவன அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. திரைப்பட நடிகர் விக்ராந்த், வெற்றி பெற்ற டி.வி.எஸ்., நிறுவன அணிக்கு பரிசு கோப்பை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் வழங்கி பாராட்டினார். அதேபோல், இரண்டாமிடம் பெற்ற எம்.பிளாஸ்டிக் அணிக்கு, 75,000 ரூபாய், பரிசுக்கோப்பை, மூன்றாமிடம் பெற்ற குளோபல் கால்சியம் அணிக்கு, 50,000 ரூபாய் வழங்கப்பட்டது.
ஓசூர் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் தலைவர் சுந்தரய்யா, பொருளாளர் அரவிந்த் ஆதி, செயலாளர் அருளானந்தம், காவேரி மருத்துவமனை மருத்துவ இயக்குனர் அரவிந்தன், பொது மேலாளர் ஜோஸ் வர்க்கீஸ், மார்க்கெட்டிங் மேலாளர் பிந்து உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே பெரிய அச்சுறுத்தல்; பிரதமர் மோடி பேச்சு
-
பதற்றத்தில் தடுமாறும் பாகிஸ்தான்; ஏவுகணை சோதனை நடத்தி சமாளிப்பு!
-
ராஜஸ்தானில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 6 பேர் கைது
-
அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்: மே 5, 6 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
-
இந்தியா போர் தொடுத்தால்.., பாகிஸ்தான் ராணுவ கமாண்டோக்கள் சொன்னது என்ன ?
-
என்னை கொலை செய்ய சதி; மீனாட்சி சுந்தரேஸ்வரர்தான் காப்பாற்றினார்: மதுரை ஆதினம் அதிர்ச்சி