'இரண்டாம் கட்ட ஒகேனக்கல் திட்டம் ரூ.8,000 கோடியில் செயல்படுத்தப்படும்'
ஓசூர்:
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம், அவைத்தலைவர் யுவராஜ் தலைமையில், ஓசூரில் நேற்று நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், மாநகர செயலாளர் மேயர் சத்யா முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து பேசினார்.
தொடர்ந்து, உணவு பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: சட்டசபை கூட்டத்தொடரில் பெரும்பாலான துறைகளிலும் இருந்து, ஓசூருக்கு பல்வேறு திட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. கூடுதலாக, 300 கோடி ரூபாய் மதிப்பில், பாதாள சாக்கடை திட்டத்தை அனைத்து பகுதிகளுக்கும் விரிவுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட ஒகேனக்கல் திட்டம், 8,000 கோடி ரூபாயில் செயல்
படுத்தப்பட உள்ளது.
ஜூன் மாதம் நிதிக்கான ஒப்புதல் பெறப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தை விரைவில் துவக்கி வைப்பார். வரும் ஜூன், 4 ம்
தேதி முதல், தகுதியானவர்கள் மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, அவர் பேசினார்.
மாவட்ட பொருளாளர் சுகுமாரன், மாநில சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை செயலாளர் விஜயகுமார், மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கண்ணன், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் மாணிக்கவாசகம், மாநகர அவைத்தலைவர் செந்தில் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
அக்னி நட்சத்திரம் மே 4ல் தொடக்கம்: 5, 6 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
-
இந்தியா போர் தொடுத்தால்.., பாகிஸ்தான் ராணுவ கமாண்டோக்கள் சொன்னது என்ன ?
-
என்னை கொலை செய்ய சதி; மீனாட்சி சுந்தரேஸ்வரர்தான் காப்பாற்றினார்: மதுரை ஆதினம் அதிர்ச்சி
-
பாக்.,கில் இருந்து பொருள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை!
-
போப் தோற்றத்துடன் அதிபர் டிரம்ப் படம் வெளியீடு; சமூக வலைதளத்தில் வைரல்!
-
சென்னையில் தொடங்கியது பா.ஜ., மையக்குழு கூட்டம்; நட்டா தலைமையில் ஆலோசனை!