ஓசூரில் பாதாள சாக்கடை திட்ட பணி ஆய்வு
ஓசூர்:ஓசூரில், பாதாள சாக்கடை திட்ட பணிகளை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள, 45 வார்டுகளில், 20 வார்டுகளில் முழுமையாகவும், 15 வார்டுகளில் பகுதியாகவும், 582.54 கோடி ரூபாய் மதிப்பில், பாதாள சாக்கடை திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பணிகளை உணவு பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று ஆய்வு செய்தார். ஓசூர் ராமநாயக்கன் ஏரி அருகே தினமும், 20.133 எம்.எல்.டி., நீரை சுத்திகரிப்பு செய்யவும், சாந்தபுரம் ஏரி அருகே, 12.51 எம்.எல்.டி., நீரை சுத்திகரிப்பு செய்யவும் அமைக்கப்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தை பார்வையிட்டார். மேலும், பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கான தடவாள பொருட்கள், திட்ட அலுவலகம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
முன்னதாக, ஓசூர் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, ''பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், பூமிக்கடியில் உள்ள குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்படாதவாறும், பாதாள சாக்கடை பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டும்,'' என, அரசு அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.
மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, கமிஷனர் மாரிச்செல்வி, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், ஓசூர் சப்கலெக்டர் பிரியங்கா உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே பெரிய அச்சுறுத்தல்; பிரதமர் மோடி பேச்சு
-
பதற்றத்தில் தடுமாறும் பாகிஸ்தான்; ஏவுகணை சோதனை நடத்தி சமாளிப்பு!
-
ராஜஸ்தானில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 6 பேர் கைது
-
அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்: மே 5, 6 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
-
இந்தியா போர் தொடுத்தால்.., பாகிஸ்தான் ராணுவ கமாண்டோக்கள் சொன்னது என்ன ?
-
என்னை கொலை செய்ய சதி; மீனாட்சி சுந்தரேஸ்வரர்தான் காப்பாற்றினார்: மதுரை ஆதினம் அதிர்ச்சி