மாத்துாரில் மழைநீர் வடிகால்வாய் துார்வாரி சீரமைக்க வேண்டுகோள்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட மாத்துார் ஊராட்சியில் 2,000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இங்குள்ள, பஜனை கோவில் தெரு, மூங்கிலம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில், மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மழைநீர் வடிகால்வாயை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை. மண் மற்றும் குப்பை கால்வாயில் தேங்கி, மழைநீர் வடிகால்வாய் முழுமையாக துார்ந்து உள்ளது.
இதனால், மழைநீர் கால்வாயில் வடிய வழியின்றி, குடியிருப்புகளை சூழுந்து, வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே பெரிய அச்சுறுத்தல்; பிரதமர் மோடி பேச்சு
-
பதற்றத்தில் தடுமாறும் பாகிஸ்தான்; ஏவுகணை சோதனை நடத்தி சமாளிப்பு!
-
ராஜஸ்தானில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 6 பேர் கைது
-
அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்: மே 5, 6 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
-
இந்தியா போர் தொடுத்தால்.., பாகிஸ்தான் ராணுவ கமாண்டோக்கள் சொன்னது என்ன ?
-
என்னை கொலை செய்ய சதி; மீனாட்சி சுந்தரேஸ்வரர்தான் காப்பாற்றினார்: மதுரை ஆதினம் அதிர்ச்சி
Advertisement
Advertisement