ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்புக்கு பாராட்டு


நாமக்கல்:தமிழக அனைத்து நாயுடு நாயக்கர் மகாஜன பேரவையின், மாநில ஒருங்கிணைப்பாளர் புலிகேசி பிரணவ குமார் வெளியிட்ட அறிக்கை:

டில்லியில், பாரத பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், வரும் காலங்களில், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கும்போது, கூடவே சேர்த்து ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என, முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.


இந்த அறிவிப்பால் வரும் காலங்களில், இந்திய முழுவதும் கல்வி மற்றும் பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகளை சரிசமப்படுத்தவும், ஜாதிவாரியான இட ஒதுக்கீட்டை முறையாக வழங்கவும் வழிவகுக்கும். இந்த அறிவிப்பிற்கு, தமிழக அனைத்து நாயுடு நாயக்கர் மகாஜன பேரவை சார்பில், பிரதமர் மோடிக்கு பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement