ஐஸ் பேக்டரியில் சோதனை

பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் வட்டார உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ரங்கநாதன் கூறியதாவது: பள்ளிப்பாளையம் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஐஸ் கிரீம் மற்றும் ஐஸ்கட்டி தயாரிப்பு இடங்களில் உணவு பாதுகாப்பு துறையினரால் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


அதில், ஐஸ் கிரீம் தயாரிப்பாளர்கள் சுகாதாரமான முறையில் தயாரிக்க வேணகடும். வேலை செய்யும் பணியாளர்களுக்கு மருத்துவ சான்று பெற வேண்டும். மேலும், குடியிருப்பு பகுதியில், ஐஸ் வண்டியில் ஐஸ் விற்பவர்கள் உணவு பாதுகாப்பு உரிமை கட்டாயம் பெற வேண்டும். இதுகுறித்து ஐஸ் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஐஸ் கிரீம் வகைகள் விற்பனை செய்பவர்கள், குளிர் சாதன பெட்டியில் மைனஸ், 18 டிகிரி செல்ஷியசில் வைக்க வேண்டும். கலப்படம் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement