அரகண்டநல்லுாரில் எள் விலை வீழ்ச்சி

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் எள் விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து விளைபொருட்கள் அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டிக்கு கொண்டு வரப்படுகின்றன.

தற்போது நெல் அறுவடை நிறைவடைந்திருக்கும் நிலையில், எள் அறுவடை தீவிரம் அடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில், 950 மூட்டை எள் ஏலத்திற்கு வந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு வரை, ஒரு மூட்டை எள் சராசரியாக ரூ. 10,900 க்கு விற்பனையானது.

நேற்று வரத்து அதிகரித்ததால் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டு, சராசரியாக ஒரு மூட்டை ரூ. 9,976க்கு விற்பனையானது. ஒரு மூட்டைக்கு ஆயிரம் ரூபாய் வரை விலை குறைந்ததால், விவசாயிகளை அதிர்ச்சி அடைந்தனர்.

நேற்று, 850 மூட்டை மக்காச்சோளம்; 320 மூட்டை கம்பு என, 424 மெட்ரிக் டன் அளவிற்கு விளைபொருட்கள் ஏலத்திற்கு வந்தன.

இதன் மூலம் ரூ. 1.81 கோடி வர்த்தகமானது.

Advertisement