ஸ்கூட்டர் கவிழ்ந்து தாயும், மகனும் பலி

பாலக்காடு:பாலக்காடு அருகே, கட்டுப்பாடு இழந்து ஸ்கூட்டர் கவிழ்ந்ததில், தாயும், மகனும் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாட்டுமந்தை என்.கே.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரத்; தனியார் நிதி நிறுவன ஊழியர். இவரது மனைவி அஞ்சு, 26. இவர்களது இரண்டு வயது ஆண் குழந்தை ஸ்ரீஜன்.
இந்நிலையில், அஞ்சு, மகன் ஸ்ரீஜன் மற்றும் தோழி சூரியலட்சுமியுடன், ஸ்கூட்டரில் ஒற்றைப்பாலம் பகுதியிலுள்ள சினிமா படப்பிடிப்பு நடக்கும் இடமான வரிக்காசேரி மனைக்கு 'ரீல்ஸ்' எடுப்பதற்காக, பாலக்காடு- - பட்டாம்பி சாலையில் சென்றனர்.
மதியம், 12:45 மணிக்கு, கல்லேக்காடு கிழக்கஞ்சேரி பகவதி அம்மன் கோவில் அருகே, காட்டுப்பாடு இழந்து ஸ்கூட்டர் சாலையோரம் அடுக்கி வைத்திருந்த குழாய்கள் மீது மோதியது. இதில், தலையில் அடிபட்டு அஞ்சுவும், மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த சூரியலட்சுமியை அப்பகுதி மக்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தகவல் அறிந்து வந்த பாலக்காடு டவுன் மேற்கு போலீசார், உடல்களை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.


மேலும்
-
ராஜஸ்தானில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 6 பேர் கைது
-
அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்: மே 5, 6 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
-
இந்தியா போர் தொடுத்தால்.., பாகிஸ்தான் ராணுவ கமாண்டோக்கள் சொன்னது என்ன ?
-
என்னை கொலை செய்ய சதி; மீனாட்சி சுந்தரேஸ்வரர்தான் காப்பாற்றினார்: மதுரை ஆதினம் அதிர்ச்சி
-
பாக்.,கில் இருந்து பொருள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை!
-
போப் தோற்றத்துடன் அதிபர் டிரம்ப் படம் வெளியீடு; சமூக வலைதளத்தில் வைரல்!