மீஞ்சூரில் ரயில்வே பாலத்திற்கு இணைப்பு சாலை பணிகள் ஜவ்வு திட்டமிட்ட காலத்திற்குள் பயனுக்கு வருவது சந்தேகம்
மீஞ்சூர்:சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் உள்ள மீஞ்சூர் -- நந்தியம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே, காட்டூர் மாநில நெடுஞ்சாலையில் ரயில்வே கேட் அமைந்துள்ளது.
இந்த ரயில்வே கேட் வழியாக, காட்டூர் - மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள 70 கிராமங்களை சேர்ந்தவர்கள், பல்வேறு தேவைகளுக்கு கடந்து செல்கின்றனர்.
தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இந்த ரயில்வே கேட் பகுதியில், வாகன ஓட்டிகளின் சிரமங்களை தவிர்க்க, 2019ல் ரயில்வே எல்லையில் பாலம் அமைக்கப்பட்டது.
சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ், 67.95 கோடி ரூபாயில், ரயில்வே மேம்பாலத்திற்கு இருபுறமும் இணைப்பு சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இணைப்பு சாலைக்கான நில எடுப்பு பணிகள் நீண்ட இழுபறிக்கு பின், 2023ல் பணிகள் முடிந்தது.
கடந்தாண்டு பிப்ரவரி மாதம், இருபுறமும் இணைப்பு சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன. நடப்பாண்டு ஜூன் மாதம் பணிகளை முடிக்க ஒப்பந்த நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, இணைப்பு சாலைக்கான கான்கிரீட் துாண்கள், மழைநீர் கால்வாய் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் திட்ட பணிகள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். ஆனால், அங்கு, 50 சதவீதம் பணிகள் கூட முடியவில்லை.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
குறைந்த பணியாளர்களை கொண்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மீஞ்சூர் பகுதியில் துாண்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன் மீது ஓடுபாதை பணிகள் நடைபெறவில்லை. அரியன்வாயல் பகுதியில் துாண்கள் அமைப்பதற்கான பணிகளே தற்போது தான் துவக்கப்பட்டு உள்ளன. நிச்சயம் திட்டமிட்ட காலத்திற்கு பணிகளை முடிக்க வாய்ப்பில்லை.
ரயில்வே கேட்டில் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்கும் நிலை தொடர்கிறது. நடப்பாண்டு ஜூன் மாதம் விமோசனம் கிடைக்கும் என நினைத்தோம். ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. கூடுதல் பணியாளர்களை கொண்டு, இணைப்பு சாலை பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
ராஜஸ்தானில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 6 பேர் கைது
-
அக்னி நட்சத்திரம் மே 4ல் தொடக்கம்: 5, 6 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
-
இந்தியா போர் தொடுத்தால்.., பாகிஸ்தான் ராணுவ கமாண்டோக்கள் சொன்னது என்ன ?
-
என்னை கொலை செய்ய சதி; மீனாட்சி சுந்தரேஸ்வரர்தான் காப்பாற்றினார்: மதுரை ஆதினம் அதிர்ச்சி
-
பாக்.,கில் இருந்து பொருள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை!
-
போப் தோற்றத்துடன் அதிபர் டிரம்ப் படம் வெளியீடு; சமூக வலைதளத்தில் வைரல்!