புவி வெப்பமயமாவதை தடுக்க நீரில் மிதந்து யோகாசனம்

பழநி : புவி வெப்பமயமாவதை தடுக்க வலியுறுத்தி பழநியில் பள்ளி மாணவர்கள் தண்ணீரில் மிதந்து விழிப்புணர்வு யோகாசனம் செய்தனர்.

தண்ணீரின் அவசியம் ,புவி வெப்பமயமாதலை தடுத்தல் ,மரம் வளர்த்தல் ஆகியவற்றின் அவசியத்தை உணர்த்தும் வகையில் பழநி மாணவர்கள் ஸ்ரீ சரண்யா 17, பிரதீபா 14, ஹர்ஷிதா 13, விஷ்வந்த் குமார் 14, ஹர்ணேஷ்12, தக் ஷதர்ஷன் 13, ஹர்ஸவர்தன் 13 , ஆகியோர் குளத்தில் தண்ணீரின் மேல் மிதந்த படி விருச்சாசனம், மச்சாசனம், பத்மாசனம், தித்திலியாசனம், தடஆசனம், சாந்தி ஆசனம் உள்ளிட்ட யோகாசனங்களை செய்தனர்.

இதேபோல் தண்ணீரில் மூழ்கி சிரசாசனம், பச்சிமோதாசனம், தனுசாசனம் செய்தனர்.

யோகா ஆசிரியர் சிவக்குமார்,'' மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்துள்ள யாகாசனங்களை உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்படும் '' என்றார்.

Advertisement