காரில் இறந்து கிடந்த நபர்: போலீசார் விசாரணை 

வானுார் : தனியார் நிறுவன ஊழியர் காரில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம், கூடுவாஞ்சேரி பிருந்தாவன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ், 51; இவர், திண்டிவனம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் காரில் புதுச்சேரி சென்றவர் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், நேற்று புதுச்சேரி - திண்டிவனம் சாலையில், தென்னகரம் சந்திப்பு சாலையோரம் காரின் சீட்டில் வாந்தி எடுத்த நிலையில் இறந்து கிடந்தார்.

கிளியனுார் போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நெஞ்சு வலியால் இறந்தாரா, மூச்சி திணறலால் இறந்தாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Advertisement