முத்ரா திட்டம் துவங்கி 10 ஆண்டுகள் நிறைவு

புதுச்சேரி : பிரதமரின் முத்ரா திட்டம் துவங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, கவர்னர் மாளிகையில் வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

இந்த திட்டம் 10ம் ஆண்டு நிறைவடைந்தை, வெற்றி விழாவாக கொண்டாடும் வகையில், முத்ரா திட்டத்தின் கீழ் பயனடைந்த வங்கிகளின் வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் நடந்தது. கவர்னர் கைலாஷ்நாதன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில், கவர்னரின் செயலர் மணிகண்டன், இந்தியன் வங்கி பொது மேலாளர் அன்பு காமராஜ், மண்டல மேலாளர் வெங்கடசுப்ரமணியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதீஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

முத்ரா திட்டத்தின் வாயிலாக சிறு மற்றும் குறு வணிகங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியால் ஏற்பட்ட சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றங்களை, வங்கி கிளைகளின் வாடிக்கையாளர்கள் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகள் புதுச்சேரி வங்கியாளர்கள் குழுமத்தின் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

Advertisement