சாரதாம்பாள் கோவிலில் நாளை தியாகராஜ சுவாமி ஜெயந்தி விழா

புதுச்சேரி : புதுச்சேரி, எல்லைப்பிள்ளைச்சாவடி, சாரதாம்பாள் கோவிலில், சிருங்கேரி சிவகங்கா மடம் சார்பில்நாளைதியாகராஜ சுவாமிகளின் 258 வது ஜெயந்தி விழாநடக்கிறது.
இதற்கான விழா நேற்று முன்தினம் மாலைவிநாயகர் பூஜையுடன் துவங் கியது. ஸ்ரீராம சீதா லட்சுமண ஆஞ்சநேய சமேத பட்டாபிேஷக தியாகராஜர் ஆவாஹன பூஜை, இசை அமுதம், வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது.
இரண்டாம் நாளான நேற்றுகாலை ஸ்ரீபக்த மீரா குழுவினர் இசை அமுதம், புதுச்சேரி மாதா அமிர்தானந்தமயி சேவா சமிதி குழுவினர் பஜன், பாரதியார் பல்கலைக்கூட மாணவர்களின் இசை அமுதம், நெய்வேலி லலிதா ராஜூலு குழுவினர் பாட்டுநிகழ்ச்சி நடந்தது.
மாலை 5:00 மணிக்கு யோகாஞ்சலி நாட்டியாலயா திவ்யப்ரியா பவனானி குழுவினர் இசை அமுதம், தேவசேனா பவனானி குழுவினர் பாட்டு, பானுமதி குழுவினர் வீணை, காயத்ரி கிரீஷ் பாட்டு நிகழ்ச்சிநடந்தது.
இன்று3ம் தேதி காலை 8:30 மணிக்கு ஸ்ரீ கிருஷ்ண பிரேமிக பஜனை மண்டலியின் தோடய மங்களம் மற்றும் உஞ்சவ்ருத்தி பஜனை, ஆண்டாள் குழுவினர் இசை அமுதம் நடக்கிறது.
தொடர்ந்து பாரதி அரவிந்த், சங்கரி முருகானந்தம் குழுவினர் மற்றும் ஜெகதீசன் குழுவினர் பாட்டு நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு தியாகராஜர் குழுவினர் மற்றும் முத்துசாமி தீட்சதர் குழுவினர்களின் இசை அமுதம், காயத்ரி ஜெயராமன் குழுவினர் மற்றும் சுனில் கார்கேயன் பாட்டு. தியாகராஜ சுவாமிகளின் 258 வது ஜெயந்தி தினமான நாளை 4ம் தேதி காலை 8:00 மணிக்கு தியாகராஜ சுவாமி ஜனன உற்சவம், சண்முகம் குழுவினரின் மங்கல இசை, பிரபல இசை கலைஞர்கள் பங்கேற்கும் பஞ்சரத்ன கீர்த்தனைகள் நடக்கிறது.
தொடர்ந்து காலை 10:30 மணிக்கு புவனா கார்த்தி குழுவினர் பாட்டு, என்.எஸ்.எஸ்., மிருதங்கம் ஆர்ட்ஸ் அகாடமி மாணவர்களின் தாளமாலை, கீர்த்திலட்சுமி குழுவினரின் பாட்டுநடக்கிறது.
மாலை 5:00 மணிக்கு பாலு சுவாமி தீட்சிதர் குழுவினர் வயலினிசை, ஜோதிர்மயி, வித்யாசங்கரி குழுவினர் பாட்டு, ஆனந்த பாலயோகி பவனானி குழுவினர் பாட்டு, சண்முகப்ரியா, ஹரிப்ரியாடவாய்ப்பாட்டு நடக்கிறது.
மேலும்
-
பழிதீர்க்குமா சென்னை? பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சு தேர்வு
-
ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கான காரணம் தெரியவில்லை: சொல்கிறார் கார்கே
-
பிரதமர் மோடியுடன் காஷ்மீர் முதல்வர் உமர் சந்திப்பு!
-
கீவ் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடையாது: ரஷ்யா எச்சரிக்கை
-
திருமண செலவை குறைத்து சாலை அமைத்து கொடுத்த தம்பதி; கிராம மக்கள் பாராட்டு
-
சென்னை வழியாக இலங்கை தப்பினார்களா பஹல்காம் பயங்கரவாதிகள்; உண்மை என்ன?