நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

திருவாடானை : திருவாடானை நீதிமன்றத்தில் பணியாற்றிய சிவில் நீதிபதி மனிஷ்குமார் பணி மாறுதலில் செல்வதால் பிரிவு உபசார விழா நடந்தது. வக்கீல் சங்கத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். சங்க செயலாளர் சசிகுமார் முன்னிலை வகித்தார்.

நீதிபதி ஆண்டனிரிசார்ட்சேவ் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். மூத்த வக்கீல் சிவராமன் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர். சங்க பொருளாளர் வேலாயுதம் நன்றி கூறினார். நீதிமன்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement