5 பைக்குகள் திருட்டு வாலிபர் கைது 

சங்கராபுரம்: பல்சர் பைக்குகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் நேற்று குளத்துார் கூட்ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அவ்வழியே பல்சர் பைக்கில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர் விரியூர் கிராமத்தை சேர்ந்த அந்தோணிசாமி மகன் ஜான்கென்னடி,28; என்பதும், அவர் ஓட்டி வந்த பைக் திருடியது என்பதும், மேலும், ஏற்கனவே சங்கராபுரம் சுற்று வட்டார பகுதியில் 4 பைக்ககள் திருடி வைத்திருப்பது தெரிய வந்தது.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, ஜான்கென்னடியை கைது செய்தனர்.

மேலும், அவர் திருடி வைத்திருந்த 5 பல்சர் பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement