ஒரு வழக்கு போட்டதும் ஓடி ஒளிந்து கொண்டார்; துணை முதல்வர் குறித்து 'மாஜி' அமைச்சர் விமர்சனம்
செஞ்சி: 'பணத்தை கையில் வைத்து கொண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என ஸ்டாலின் நினைத்து கொண்டிருக்கிறார்' என முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசினார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த வல்லம் ஒன்றியம், நாட்டார்மங்கலம் கூட்ரோட்டில் அ.தி.மு.க., தொழிற்சங்கம் சார்பில் நடந்த மே தின பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
அடுத்த ஆண்டு இதே நாளில் புதிய அரசு தேர்வு செய்யப்பட்டிருக்கும். இன்னும் 8 மாதங்கள் தான் உள்ளன. ஜனவரியில் தேர்தல் கலை கட்டிவிடும். நான்கரை ஆண்டு காலத்தில் இந்த அரசு சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
அனைத்து இல்லத்தரசிகளுக்கும் உரிமைத் தொகை என தேர்தல் அறிக்கையில் சொன்ன ஸ்டாலின் மொத்தம் உள்ள 2 கோடியே 24 லட்சம் ரேஷன் கார்டுகளில் 1 கோடியே 4 லட்சம் கார்டுகளுக்கு மட்டும்தான் உரிமைத் தொகை வழங்கினார். தேர்தல் வர இருப்பதால் இப்போது மீண்டும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
ஜெ., ஆட்சியில் 45 லட்சம் முதியோர்களுக்கு உதவி தொகை வழங்கினோம். இப்போது 17 லட்சம் முதியோருக்கு மட்டும் தான் உதவி தொகை வழங்குகின்றனர். துணை முதல்வர் உதயநிதியை காணவில்லை. ஒரே ஒரு வழக்கு போட்டதும் ஓடி ஒளிந்து கொண்டார். மானிய கோரிக்கையை தாக்கல் செய்யவும் வரவில்லை.
உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் அவர் தான் பதில் சொல்ல வேண்டும். இதற்கே வராத உதயநிதி தமிழகத்தை வழிநடத்த போகிறாரா?
வீட்டு வரி கட்டினால் தான் நுாறு நாள் திட்டத்தில் வேலை என கிராமங்களில் கட்டாயப்படுத்தி வரி வசூல் செய்கின்றனர். இனி ஒவ்வொரு ஆண்டும் வீட்டு வரி உயரும். பணத்தை கையில் வைத்து கொண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என ஸ்டாலின் நினைத்து கொண்டிருக்கிறார்.
தமிழக அரசின் நிர்வாக திறமை இன்மையால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. இப்போது 2 அமைச்சர்கள் நீதிமன்றத்தால் அடித்து விரட்டப்பட்டுள்ளனர். அடுத்த அமைச்சர்கள் மீது தொடர்ச்சியாக வழங்குகள் வந்து கொண்டிருக்கின்றன. இதை ஊடகங்கள் வெளிப்படுத்தவில்லை. ஆனால் அ.தி.மு.க., மீது தேவையற்ற விமர்சனங்களையும், விவவாதங்களையும் நடத்துகின்றனர்.
சட்டசபை தேர்தலில் சிந்தித்து ஓட்டு போட வேண்டிய நேரம் இது. கஞ்சா போதையில் இருந்து இளைஞர்களை காப்பாற்றவும், கற்பழிப்பு, பாலியல் குற்றங்களில் இருந்து பெண்களை பாதுகாக்கவும், இழந்த உரிமைகளை மீண்டும் பெறவும் அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
சென்னை வழியாக இலங்கை தப்பினார்களா பஹல்காம் பயங்கரவாதிகள்; உண்மை என்ன?
-
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறுவது எளிதானதல்ல; தனக்குத்தானே ஆறுதல் சொல்கிறது பாகிஸ்தான்!
-
ம.பி.,யில் புலி தாக்கி பண்ணை தொழிலாளி பலி
-
தடுப்பூசி போட்ட பிறகும் சிறுமிக்கு பரவிய ரேபிஸ் நோய்; கேரளாவில் மற்றொரு சம்பவம்
-
இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: 17 நாகை மீனவர்கள் காயம்
-
ஆஸி., பொதுத்தேர்தல்; மீண்டும் ஆட்சியைப் பிடித்தது ஆளும் தொழிலாளர் கட்சி