நாளை நீட்தேர்வு: 3022 பேர் பங்கேற்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நாளை (மே 4) நடக்கும் நீட் தேர்வில் 6 மையங்களில் 3022 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

மாவட்டத்தில் மே 4ல் நீட் தேர்வு நடக்கிறது. இதில் வி.வி.வி., பெண்கள் கல்லுாரி மையத்தில் 480 மாணவர்களும், கே.வி.எஸ்., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 600 மாணவர்களும், ஷத்திரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 480 மாணவர்களும், மல்லாங்கிணர் கேந்திரியவித்யாலயாவில் 480 மாணவர்களும், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 502மாணவர்களும், எஸ்.பி.கே., பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 480 மாணவர்களும் என 3022 மாணவர்கள் 6 மையங்களில் தேர்வெழுதுகின்றனர். 488 அரசு பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதே போல் உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர தனியார் பயிற்சி மையங்களில் படித்த மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களும் தேர்வெழுதுகின்றனர். இதற்காக பலமுறை ஆயத்த தேர்வு எழுதி தயார் நிலையில் உள்ளனர்.

தேர்வு விதிமுறைகள் வழங்கப்பட்டு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் பணியும் நடந்து வருகிறது.

Advertisement