சேத்துாரில் யானைகள் புகுந்து தென்னை, மா மரங்கள் சேதம்--

சேத்துார் : சேத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார விவசாய தோப்புகளில் யானை புகுந்து 120 தென்னை, மா, மரங்கள் வாழை கன்றுகளை சேதப்படுத்தியால் கடுமையான நஷ்டத்தில் தவித்து வருகின்றனர்.
சேத்துார் மலையடிவாரம் செல்லும் பாதையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல், தென்னை, மா உள்ளிட்ட விவசாய நிலங்கள் உள்ளன.
இப்பகுதி ஆதிபுத்திரங் கொண்ட அய்யனார் கோயில் பகுதி கருவேப்பிலை ஓடை ஒட்டிய நிலங்களில் தோப்புகளை குத்தகை எடுத்தும் சொந்தமாகவும் சிலர் விவசாயம் செய்து வருகின்றனர்.
இதில் நேற்று முன்தினம் இரவு குட்டியுடன் கூடிய யானை கூட்டம் முகாமிட்டு 120 தென்னை, 4 மா மரங்கள், ஊடு பயிராக போட்டுள்ள 27 வாழை மரங்களை சேதப்படுத்தி சென்றுள்ளது.
இதனால் சேத்துாரை சேர்ந்த மாரியப்பன், ராமராஜ், நாராயணன், தேவதாஸ் முகவூர் மாடசாமி, கருப்பையா ஆகியோருக்கு ஒரே நாளில் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மாரியப்பன்: விவரம் தெரிந்து இத்தனை ஆண்டு காலத்தில் யானைகள் இந்த தோப்பிற்கு வந்ததில்லை. வனத்திலிருந்து 3 கி.மீ., கடந்து வந்து பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.
ஒரு வருடம் முதல் நான்கு வருடம் வரை பாதுகாத்து வளர்த்த தென்னையின் குருத்துகளை ஒடித்தும், மரங்களை சாய்த்தும், மாமரத்தை பக்கவாட்டில் ஒடித்தும், ஊடுபயிரான வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளன.
சேதத்தை மதிப்பிட்டு நிவாரணம் வழங்குவதுடன் யானைகளை வனப்பகுதிகளுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறுவது எளிதானதல்ல; தனக்குத்தானே ஆறுதல் சொல்கிறது பாகிஸ்தான்!
-
ம.பி.,யில் புலி தாக்கி பண்ணை தொழிலாளி பலி
-
தடுப்பூசி போட்ட பிறகும் சிறுமிக்கு பரவிய ரேபிஸ் நோய்; கேரளாவில் மற்றொரு சம்பவம்
-
இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: 17 நாகை மீனவர்கள் காயம்
-
ஆஸி., பொதுத்தேர்தல்; மீண்டும் ஆட்சியைப் பிடித்தது ஆளும் தொழிலாளர் கட்சி
-
ஆன்மிகமும், தொழில்நுட்பமும் இணைந்து செயல்பட முடியும்: சைவ சித்தாந்த மாநாட்டில் ஜே.பி.நட்டா பேச்சு