நரிக்குடி அம்மன்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு

நரிக்குடி: நரிக்குடி அம்மன்பட்டியில் காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., கனகராஜ் (பொறுப்பு) துவக்கி வைத்தார்.
மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த 15 காளைகள் பங்கேற்றன. ஒரு காளைக்கு ஒரு குழு என போட்டி நடத்தப்பட்டது.
ஒரு குழுவிற்கு 9 வீரர்கள், 3 மாற்று வீரர்கள் என 10 குழுவில் 150 மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டு, காளைகளை அடக்கினர். ஒரு காளைக்கு 20 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட்டு போட்டி நடைபெற்றது.
நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் மாடுபிடி வீரர்கள் காளையை பிடிக்கவில்லை என்றால் காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஒரு சில குழுவைச் சேர்ந்த மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கினர். வெற்றி பெற்ற காளைக்கும், குழுவினருக்கும் ரொக்கம், பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
திருச்சுழி டி.எஸ்.பி., பொன்னரசு தலைமையில், இன்ஸ்பெக்டர் மணிகண்டன் முன்னிலையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டனர்.
மேலும்
-
சென்னை வழியாக இலங்கை தப்பினார்களா பஹல்காம் பயங்கரவாதிகள்; உண்மை என்ன?
-
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறுவது எளிதானதல்ல; தனக்குத்தானே ஆறுதல் சொல்கிறது பாகிஸ்தான்!
-
ம.பி.,யில் புலி தாக்கி பண்ணை தொழிலாளி பலி
-
தடுப்பூசி போட்ட பிறகும் சிறுமிக்கு பரவிய ரேபிஸ் நோய்; கேரளாவில் மற்றொரு சம்பவம்
-
இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: 17 நாகை மீனவர்கள் காயம்
-
ஆஸி., பொதுத்தேர்தல்; மீண்டும் ஆட்சியைப் பிடித்தது ஆளும் தொழிலாளர் கட்சி