பெரியகுளத்தில் கோடை மழை

பெரியகுளம் : பெரியகுளம் தாலுகா பகுதிகளில் ஒரு வாரமாக காலை 10:00 மணி முதல் மாலை 4:00 வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

இதனால் வெப்பக் காற்று வீசியது. பகலில் ரோடு, பஜார் வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. குடை பிடித்து செல்லும் நிலை இருந்தது.

இதனை தொடர்ந்து இரவில் 'புழுக்கத்தால்' தூங்குவதற்கு அவதிப்பட்டனர். நேற்று காலை வழக்கம்போல வெயில் தாக்கம் துவங்கியது.

மாலை 4:00 மணிக்கு சாரலாக பெய்த மழை சிறிது நேரத்தில் கனமழையாக பெய்தது. இதனால் வெப்பக் காற்று விலகி குளிர்ந்த காற்று வீசியது.-

Advertisement