போராட்டம் வாபஸ்

அங்கன்வாடி மைய ஊழியர் சங்க தலைவர் ரத்தினமாலா கூறியதாவது:

அங்கன்வாடி ஊழியர்களின் பிரதான கோரிக்கையான கோடை விடுமுறை, பதவி உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்டவை குறித்து, வரும் 22ம் தேதிக்குள், அடுத்தகட்ட பேச்சில் முடிவு காண்பதாக, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை இயக்குநரும், அமைச்சர் கீதா ஜீவனும் தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து, எங்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகிறது. 22ம் தேதி அதிகாரிகள் கூறுவதன் அடிப்படையில், அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement