'மல்டி ஆக்சில்' சொகுசு பஸ்கள் வாங்குகிறது அரசு

சென்னை:அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், 1,080க்கும் மேற்பட்ட டீலக்ஸ், 'ஏசி' விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. முதல் முறையாக, 'மல்டி ஆக்சில்' சொகுசு பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம்.

முதற்கட்டமாக, 20 பஸ்கள் வாங்க, 'டெண்டர்' வெளிடப்பட்டுள்ளது. ஒரு பஸ் விலை, 1.15 கோடி ரூபாய். ஒரே நேரத்தில், 55 பேர் பயணம் செய்ய முடியும். சொகுசு இருக்கைகள், 'ஏசி' வசதி, மொபைல் போன், 'சார்ஜிங்' மற்றும், 'வைபை' உள்ளிட்ட வசதிகள் இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement