திருவாரூரில் அரசு பஸ்- வேன் நேருக்கு நேர் மோதல்; 4 பேர் பரிதாப பலி

3

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அரசு பஸ்சும், வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.



திருவாரூர் மாவட்டம், திருத்துறைபூண்டி அருகே, கிழக்கு கடற்கரை சாலையில், நாகப்பட்டினத்தில் இருந்து, ஏர்வாடி சென்ற அரஸ் பஸ்சும், வேளாங்கண்ணி சென்ற ஆம்னி வேனும் இன்று (மே 04) காலை 7:00 மணிக்கு,நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement