ஹாக்கி: இந்தியா 4வது தோல்வி

பெர்த்: இந்திய பெண்கள் ஹாக்கி அணி 4வது தோல்வியை பெற்றது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் ஹாக்கி அணி, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதற்கட்டமாக ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிராக விளையாடிய 3 போட்டியிலும் தோல்வியடைந்தது. பெர்த்தில் நடந்த போட்டியில் இந்திய அணி, சீனியர் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.
இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் தொடர்ச்சியாக 4வது தோல்வியை பதிவு செய்தது. இந்திய அணிக்கு நவ்னீத் கவுர் (35வது நிமிடம்), லால்ரெம்சியாமி (59வது) தலா ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் கிரேஸ் ஸ்டீவர்ட் (2வது நிமிடம்), ஜேட் ஸ்மித் (36வது), கிரேடா ஹேய்ஸ் (42வது) கைகொடுத்தனர்.
இவ்விரு அணிகள் மோதும் கடைசி போட்டி பெர்த்தில் இன்று நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒட்டன்சத்திரத்தில் கோவைக்காய் கிலோ ரூ. 5
-
மீன்பிடி தடையால் 20 நாட்களாக ராமேஸ்வரம் கடலோரம் வெறிச்; மீன்கள் விலை உயர்வு
-
மிருகக்காட்சி சாலையில் 'மக்காவ் கிளி' எஸ்கேப்
-
முதல்வர் அறிவித்த திட்டங்களுக்கு அரசாணை, நிதி வரவில்லை
-
ஒரு கோடி ரூபாய் மோசடி வங்கி அதிகாரி கைது
-
விதவிதமான பொய்களை சொல்லி ரூ.1.56 கோடி சுருட்டிய 6 பேர் கைது
Advertisement
Advertisement