'ஜியோஸ்டார்' நிறுவனம் சாதனை

மும்பை: மும்பையில், உலக ஆடியோ விஷூவல் பொழுதுபோக்கு மாநாடு ('வேவ்ஸ்') நடந்தது. இதில் ஜியோஸ்டார் நிறுவனத்தின் துணை தலைவர் உதய் சங்கர், மீடியா பார்ட்னர்ஸ் ஆசியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விவேக் கவுடோ கலந்துரையாடினர்.
அப்போது பேசிய உதய் சங்கர், ''கடந்த 25 முதல் 30 ஆண்டுகளில் இந்திய ஊடகங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன. இந்தியாவில் தொலைக்காட்சி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதேபோல 'ஸ்டிரீமிங் வீடியோ' நுகர்வும் அதிகரித்து வருகின்றன. இது ஆரம்பம் தான்.
தற்போது 70 கோடி பேர் 'ஸ்டிரீமிங் வீடியோ'வில் இணைந்துள்ளனர். அடுத்த 3 ஆண்டுகளில் ரூ. 83 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்ய ஜியோஸ்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்படி 2024ல் ரூ. 25 ஆயிரம் கோடி, 2025ல் ரூ.30 ஆயிரம் கோடி, 2026ல் 32 முதல் 33 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்ய உள்ளோம். இது, 'யூடியூப்' சேனலைவிட அதிக முதலீடு செய்து சாதனை படைத்துள்ளோம். பிரிமியர் லீக் போட்டிகள் மூலம் 30 கோடி சந்தாதாரர்களை இணைக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்,'' என்றார்.

மேலும்
-
சென்னையில் நாளை 2 இடங்களில் போர் ஒத்திகை
-
வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்ட செயலாக்கம் எப்போது: இஸ்ரோ தலைவர் தகவல்
-
மாஸ்கோ சென்ற விமானத்தில் தீ; டில்லி விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம்
-
இந்தியா - பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம் இறுதியானது: பிரதமர் மோடி மகிழ்ச்சி
-
4 மாதங்களுக்கு முடிக்கப்பட்ட பணிகளுக்கு மீண்டும் டெண்டர்: சென்னை மாநகராட்சி பெண் அதிகாரி சஸ்பெண்ட்
-
ராமநாதபுரம் அருகே எரிவாயுக்குழாயில் உடைப்பு: கசிவு சரி செய்யும் பணி தீவிரம்