4 மாதங்களுக்கு முடிக்கப்பட்ட பணிகளுக்கு மீண்டும் டெண்டர்: சென்னை மாநகராட்சி பெண் அதிகாரி சஸ்பெண்ட்

9

சென்னை: சென்னை மாநகராட்சியில் நான்கு மாதங்களுக்கு முன்பு முடிக்கப்பட்ட பணிகளுக்கு மீண்டும் டெண்டர் விடப்பட்ட விவகாரத்தில், பெண் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


சென்னை மாநகராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், சாலையை சீரமைத்தல், நடைபாதை அமைத்தல் மற்றும் சாலைகளில் கோடு வரைதல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.2.2 கோடியில் டெண்டர் விடப்பட்டது.


லங் கார்டன் சாலை, ராஜாஜி சாலை, ராஜா முத்தையா சாலை, யானை கவுனி மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த பணிகள் நடக்க உள்ளதாக அந்த டெண்டரில் குறிப்பிடப்பட்டு இருந்தது.


மேலும், இந்த டெண்டர்,சில குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே வழங்கப்பட இருந்ததும், இதற்காக மற்ற ஒப்பந்ததாரர்கள் அளித்த ஏலத்தை திரும்ப பெற்றுக் கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.


ஆனால், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட பணிகள் அனைத்தும் நான்கு மாதத்திற்கு முன்பே முடிவடைந்தது பயன்பாட்டில் இருந்தது தெரியவந்தது.இது குறித்து அறிந்ததும் விசாரணைக்கு சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் விசாரணைக்கு உத்தரவிட்டு இருந்தார்.


இதனைத் தொடர்ந்து உதவி செயற்பொறியாளர் சித்ராதேவியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.


சென்னை மாநகராட்சியில் நான்கு மாதங்களுக்கு முன்பு முடிக்கப்பட்ட பணிகளுக்கு மீண்டும் டெண்டர் விடப்பட்ட விவகாரத்தில், பெண் அதிகாரி சஸ்பெண்ட் செய்து மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

Advertisement