ராமநாதபுரம் அருகே எரிவாயுக்குழாயில் உடைப்பு: கசிவு சரி செய்யும் பணி தீவிரம்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அடுத்த சோலையன் தோப்பு பகுதியில் தனியாருக்கு சொந்தமான விளைநிலத்தில் பதிக்கப்பட்டுள்ள ஓஎன்ன்ஜிசி இயற்கை எரிவாயு குழாயில் ஏற்பட்ட லீக் காரணமாக கேஸ் மேற்பரப்பில் தேங்கி இருந்த தண்ணீருடன் கொப்பளித்ததால் அச்சமடைந்த மக்கள் தீயணைப்பு துறை மற்றும் ஓஎன்ஜிசி நிறுவன ஊழியர்களுக்கு கோடித்த தகவலின் அடிப்படையில் உடனடியாக குழாய் கேஸ் லீக்கேஜ் சரி செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வழுதூர், தெற்கு காட்டூர்,ரெகுநாதபுரம், பனைக்குளம் போன்ற பகுதிகளில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தின் (ஓ.என்.ஜி.சி) சார்பில் பல்வேறு இடங்களில் இயற்கை எரிவாயு சேகரிக்கப்பட்டுவருகிறது.
இவ்வாறு சேகரிக்கப்படும் எரிவாயு, நிலத்தில் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள்மூலம் ராமநாதபுரம் அருகேயுள்ள வழுதூரில் செயல்பட்டுவரும் ஓ.என்.ஜி.சி-யின் எரிவாயு சுத்திகரிப்பு நிறுவனத்துக்குக் கொண்டுசெல்லப்படுகிறது.
இந்நிலையில், எரிவாயு எடுத்துச்செல்லும் குழாய் ஒன்றில் இன்று மதியம் திடீர் என வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பனைக்குளம் அருகே சோகையன்தோப்பு என்ற பகுதியில் தனியாருக்குச் சொந்தமான தோப்பில் பதிக்கப்பட்டிருந்த பைப் ஒன்றில் இந்த உடைப்பு ஏற்பட்டு, அதன் வழியாக எரிவாயும் வெளியேறியதால் மேற்பரப்பில் தேங்கி இருந்த மழை தண்ணீரும் சேர்ந்து கொப்பளித்துக்கொண்டு வெளியேறியுள்ளது.
இதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இதுகுறித்து ராமநாதபுரம் தீயணைப்பு துறை மற்றும் ஒ.என்.ஜி.சி.அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அங்கு வந்த ஓ.என்.ஜி.சி ஊழியர்கள், குழாயில் வெடிப்பு ஏற்பட் குறித்து ஆய்வுசெய்தனர்.
நிலத்தின் அடியில் புதைக்கப்பட்டுள்ள எரிவாயுக் குழாயில் 3 முதல் 4 அடி நீளம் வரை உடைந்து, எரிவாயு மற்றும் தண்ணீர் வெளியேறியது இந்த ஆய்வில் தெரியவந்தது.
மேலும், எரிவாயு மற்றும் தண்ணீர் வெளியேற்றத்தால் சுமார் ஒன்றரை அடி ஆழம் வரை பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக எரிவாயுக் கசிவு ஏற்பட்டு கொப்பளித்துக்கொண்டிருப்பதைத் தடுத்துநிறுத்தும் பணியில் ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக ஓஎன்ஜிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது