'ஏஐ ஏஜன்ட்' தொழில்நுட்பம்; முன்னணி நிறுவனங்கள் ஆர்வம்
திருப்பூர் :'ஏஐ - ஏஜன்ட்' தொழில்நுட்பம் என்பது, 'நிட்டிங்' துவங்கி, 'பேக்கிங்' வரை அனைத்து பிரிவுகளிலும் சாத்தியம்' என, பின்னலாடை தொழில்துறையினர் புதிய தொழில்நுட்பத்துக்கு மாறி வருகின்றனர்.
பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகளை உற்பத்தியில், 'ஏஐ' தொழில்நுட்பம் வேகமாக பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது.
மனித சக்தி பயன்பாடின்றி, சிந்தித்து முடிவெடுப்பது, செயல்படுவது போன்ற சுய திறன் மென்பொருள்களை தயாரிப்பதே, 'ஏஐ - ஏஜன்ட்' எனப்படுகிறது.
உற்பத்தி நிலையில் கண்காணிப்பு, வாடிக்கையாளர் சேவை, மார்க்கெட்டிங், தர பரிசோதனை, தானியங்கி சேவை என, ஒவ்வொரு பிரிவிலும், 24 மணி நேரம் பணியாற்றும் 'டிஜிட்டல்' ஊழியர் என்றும் கூறலாம்.
திருப்பூரில், முன்னணி ஏற்றுமதி நிறுவனங்கள், தையல் செயல் திறனை கண்காணித்து, தானியங்கி முறையில் திருத்தம் செய்யும் தொழில்நுட்பத்தை செயல்படுத்தியுள்ளன.
தானியங்கி விளம்பரம், 'கேட்லாக்' தயாரிப்பு, மூலப்பொருள் சப்ளையை கண்காணிக்கும் தொழில்நுட்பம், பேஷன் டிசைனிங் மாணவருக்கான பயிற்சியிலும், 'ஏஐ - ஏஜன்ட்' என்ற தொழில்நுட்பத்தை செயல்படுத்த துவங்கிவிட்டனர்.
இதுகுறித்து மத்திய அரசின், 'ஸ்டார்ட் அப் இந்தியா' வழிகாட்டி ஆலோசகர் ஜெய்பிரகாஷ் கூறுகையில், ''வருங்காலத்தில், 'ஏஐ - ஏஜன்ட்'கள், தமிழகத்தில் வளர்ச்சி பெறும். முழுமையான தானியங்கி தொழிற்சாலை, மார்க்கெட்டிங் ஆலோசனை, 'ஸ்டார்ட் அப் இன்குபேஷன்', பயன்படுத்திய ஜவுளி பொருட்களில் இருந்து, புதிய ஆடை தயாரிக்கும் மறுசுழற்சி தொழில்நுட்பம் ஆகியவை, 'ஏஐ - ஏஜன்ட்' தொழில்நுட்பத்தில் சாத்தியமாகும்.
திருப்பூரில், 'ஏஐ - ஏஜன்ட்'கள் பயணம் வெற்றிகரமாக துவங்கியுள்ளது; திருப்பூரில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் செயல்படுத்தினால், தொழில்நுட்ப நகரமாக திருப்பூர் உயரும்,'' என்றார்.
திருப்பூர் 'ஈஸ்ட்மென் எக்ஸ்போர்ட்ஸ்' நிர்வாக இயக்குனர் சந்திரன் கூறுகையில், ''பின்னலாடை உற்பத்தி பிரிவுகளில், ஏற்கனவே பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்பாட்டில் உள்ளன.
அவற்றுடன், 'ஏஐ' தொழில்நுட்பத்தை இணைத்தால், நேர்த்தியான உற்பத்தி சாத்தியமாகும். திருப்பூரை பொறுத்தவரை, 'நிட்டிங்' துவங்கி, 'பேக்கிங்' வரையில், 'ஏஐ' தொழில்நுட்பத்தை செயல்படுத்த முடியும். உற்பத்தியில் ஏற்படும் தவறுகள் தவிர்க்கப்படும்; விரைவான உற்பத்தி, தவறில்லாத நேர்த்தியான உற்பத்தியுடன், உற்பத்தி திறனும் வேகப்படுத்தப்படுகிறது.
பனியன் துறையில் உள்ள சிறிய நிறுவனங்களும் எதிர்கால உற்பத்தி வேகத்துக்கு ஏற்ப 'ஏஐ' தொழில்நுட்பத்துக்கு மாற வேண்டும்,'' என்றார்.
மேலும்
-
ரோகித் சர்மா 'குட்-பை' * டெஸ்ட் அரங்கில் இருந்து...
-
வில்வித்தை: இந்தியா அசத்தல்
-
முஷீருக்கு 'ஜாக்பாட்' * மும்பை பிரிமியர் ஏலத்தில்
-
பைனலில் இந்திய பெண்கள் * தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது
-
தாக்குதல் நடத்தியது ஏன்: ஐ.நா., பாதுகாப்பு சபை உறுப்பு நாடுகளிடம் இந்தியா விளக்கம்
-
பயங்கரவாத உள்கட்டமைப்பை அழித்தது நியாயமானது: பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்