துாய்மை பணியாளருக்குசிறப்பு மருத்துவ முகாம்

திருச்செங்கோடு:திருச்செங்கோடு நகர தி.மு.க., மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து, நகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமை நடத்தின.


நகராட்சி தலைவர் நளினி சுரேஷ்பாபு, முகாமை துவக்கி வைத்தார். டாக்டர் ரதீஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர், நகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு பொது மருத்துவம், எலும்பு மூட்டு மருத்துவம், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை மேற்கொண்டு, மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் வழங்கினர். நகராட்சி கமிஷனர் அருள், துப்புரவு அலுவலர் வெங்கடாஜலம், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement