10.... 11.... 15... பாகிஸ்தானுக்கு 'சிந்தூர்' பாடம் புகட்டிய இந்தியா!

புதுடில்லி: அன்று உரி, புல்வாமா, இன்று பஹல்காம் என பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா மீண்டும் பாடம் புகட்டி இருக்கிறது.
ஜம்முகாஷ்மீர் பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகள் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளால் ஏப்.22ம் தேதி கொல்லப்பட்டனர். யாதும் அறியாத சுற்றுலா பயணிகள் சிந்திய ரத்தத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மே 7ம் தேதி நள்ளிரவு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை அதிரடியான ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்ட நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா பாடம் புகட்டி இருக்கிறது.
ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கங்கள் அத்துமீறி தாக்குதல்கள் நடத்தும் போது உரிய தருணங்களில் பாடம் புகட்டி இருக்கிறது இந்தியா.
2016ம் ஆண்டு உரி தாக்குதல், புல்வாமா தாக்குதல், அதனைத் தொடர்ந்து, இப்போது பஹல்காம் தாக்குதல் என பாகிஸ்தான் பயங்கரவாத செயல்களுக்கு குறுகிய காலக்கட்டத்திலேயே இந்தியா பதிலடி தந்திருக்கிறது. உரி தாக்குதல் நடந்த 10 நாட்களுக்கு பின்னர் இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது. புல்வாமா தாக்குதல் முடிந்து 11 நாட்களில் பதிலடியை இந்தியா அரங்கேற்றியது.
தற்போது பஹல்காம் சம்பவம் நிகழ்ந்து 15 நாட்களில் கடந்த 2 முறையிலும் இல்லாத முறையில் போர்க்கால ஒத்திகை, இருநாடுகள் இடையே போர் பதற்றம் என்ற கோணங்களில் நடவடிக்கைகள் எடுப்பதாக பாகிஸ்தானை திசை திருப்பி, ஆபரேஷன் சிந்தூரை நிறைவேற்றி இருக்கிறது இந்திய ராணுவம்.
அனைத்துவித நடவடிக்கைகளிலும் பாகிஸ்தான் மற்றும் அதற்கு நேரிடையான மற்றும் மறைமுக ஆதரவு அளிக்கு நாடுகள், பயங்கரவாத இயக்கங்களுக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளதாக பலரும் புகழாரம் சூட்டி வருகின்றன.
ஆபரேஷன் சிந்தூர், பாகிஸ்தானின் பயங்கரவாத குரல்வளையை தற்காலிகமாக நெரித்துள்ளது எனலாம். நினைத்தது நடந்தது என்பது ஒரு புறம் இருந்தாலும் பயங்கரவாதத்தின் ஆணிவேரை கண்டறிந்து அதை பிரதமர் மோடி அட்சரசுத்தமாக அழிக்க வேண்டும் என்பதே பல்வேறு தரப்பில் இருந்து ஒலிக்கும் குரல்களாக உள்ளன.













மேலும்
-
சென்னை - பெங்களூரு, ஹைதராபாத் 160 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கம்
-
கலைக்கல்லுாரி பட்டமளிப்பு விழா
-
இடுக்கியில் தெரு நாய்கள் அதிகரிப்பு 4 மாதங்களில் 2525 பேர் பாதிப்பு
-
ஆவின் பாலகங்களில் மோர் தட்டுப்பாடு வரவேற்பு இருந்தும் கிடைக்காத அவலம்
-
அக்னி நட்சத்திரத்தில் பெய்த கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி
-
வீரபாண்டி சித்திரை திருவிழா திரளாக பங்கேற்ற பக்தர்கள்