பள்ளி மாணவிக்கு பாராட்டு

ஸ்ரீவில்லிபுத்துார் : கிருஷ்ணன் கோவில் லிங்கா குளோபல் சி.பி.எஸ்.இ. பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி விமோக்ஷ்னா. இவர் இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவில், எழுதுவதில் மகிழ்ச்சி என்ற தலைப்பில் உள்நாட்டு கடித கட்டுரை போட்டியில் மூன்றாமிடம் பெற்று சாதனை புரிந்தார்.

மாணவிக்கு பரிசுத்தொகை ரூ. 5 ஆயிரம், மாணவி உருவத்தில் தபால் தலை, சான்றிதழ்களை விருதுநகர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுசிலா வழங்கினார். விழாவில் துணை முதல்வர் நாச்சியார், அஞ்சல் துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். பள்ளி தாளாளர் ஸ்ரீதரன், செயலாளர் அறிவழகி, இயக்குனர் சசியானந்த், முதல்வர் அல்கா சர்மா ஆகியோர் மாணவியை பாராட்டினர்.

Advertisement