கோடை மழையால் கொசுக்கள் உற்பத்தி; அவசியமாகிறது சுகாதாரத்துறை நடவடிக்கை

மாவட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் நீர்நிலைகள் வறண்டு குடிநீர் பஞ்சம் , விவசாயம் பாதித்துள்ளது. இதற்கிடையே மாவட்டத்தில் ஆங்காங்கே கோடை மழை வெளுத்து வாங்குகிறது.பொதுமக்கள் குடிநீர் தேவையை கருதி தண்ணீரை சேகரித்து வைக்கின்றனர்.இச்சூழல்கள் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதற்கு ஏற்றதாக உள்ளது.
ஆண்டுதோறும் கோடைகாலத்தில் பரவும் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கையாக கிராமம், நகரங்களில் வீடுதோறும் சோதனை, சாக்கடை , நீர்நிலைகளில் துாய்மை பணி மேற்கொண்டு குளோரின் பயன்படுத்துவது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டனர். கொசுக்கள் அதிகரிப்பதை தடுப்பதற்கான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டன.
தற்போது மாவட்டத்தில் கோடை மழை பெய்யும் நிலையில் கொசுக்கள் அதிகரிக்க காய்ச்சல், உடல் உபாதைகள்,ஜலதோஷ பிரச்னை ஏற்பட்டுள்ளன. சுகாதாரத்துறையே எதையும் கண்டுக்காது ஆழ்ந்த துாக்கத்தில் உள்ளது. தற்போதைய மழையால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சுகாதாரத்துறை விழிப்புடன் செயல்பட்டு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.


மேலும்
-
மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்; மின் அதிகாரிகள் இருவர் கைது!
-
அப்பாவி மக்களை கொன்றவர்களை ராணுவம் அழித்துள்ளது: ராஜ்நாத் சிங்
-
சி.பி.ஐ., இயக்குநர் பிரவீன் சூட் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு
-
இந்திய படைகளுக்கு காங்., முழு ஆதரவு: ராகுல் பேட்டி
-
'ஆபரேஷன் சிந்துார்' குறித்து இந்திய ராணுவம் சொன்ன 10 முக்கிய விஷயங்கள் இவை தான்!
-
எல்லையில் பதற்றம்; மும்பை - பஞ்சாப் லீக் போட்டி மாற்றம்