உலுப்பகுடியில் புரவி எடுப்பு விழா

நத்தம், : நத்தம் அருகே உலுப்பகுடி வல்லடியார் சுவாமி, முன்னோடி கருப்பு, அரண்மணை கருப்பு ,கன்னிமார் சுவாமிகளின் புரவி எடுப்பு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதையொட்டி நேற்று முன்தினம் மாலை ஊர் மந்தையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமி சிலைகள் கண் திறக்க சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து நேற்று மாலை வல்லடியார் சுவாமி, முன்னோடி கருப்பு, அரண்மணை கருப்பு , கன்னிமார்,மதிலை சிலைகள் வர்ணக் குடைகளுடன் மேளதாளம் முழங்க ஊர்வலமாக இருப்பிடம் போய் சேர்ந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement