கடையில் தீ விபத்து

பழநி : பழநி -- திண்டுக்கல் சாலையில் அரசு போக்குவரத்துக் கழக கோவை கிளை செயல்பட்டு வரும் பகுதியில் சாலை ஓரத்தில் கரும்பு ஜூஸ் விற்கும் கடை உள்ளது. இது சிவகிரிபட்டி கருப்புசாமிக்கு சொந்தமானது.

நேற்று இரவு கரும்பு ஜூஸ் போடும் இடத்தில் அமைக்கப்பட்ட கொட்டகை திடீரென தீ பற்றி எரிந்தது. அருகில் பெட்ரோல் பங்க் இருந்த நிலையில் தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.

Advertisement