சாம்பிராணி ஆலையில் தீ விபத்து சின்னசேலத்தில் பரபரப்பு

சின்னசேலம் : சின்னசேலம் அருகே சாம்பிராணி தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட, தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த பூண்டி, அம்மையகரம் கிராமத்தில் தனியார் ஊதுபத்தி மற்றும் சாம்பிராணி தயாரிக்கும் ஆலை உள்ளது. இங்கு, 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
நேற்று பகல் 1:00 மணிக்கு ஆலையில் மூலப்பொருளான கரி துண்டுகள், அரைக்கும் இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர்.
ஆனால் மூலப்பொருட்கள் இருப்பு வைத்திருந்த குடோன் மற்றும் ஆலை முழுவதும் தீ வேகமாக பரவியது.
இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில், தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் இருசம்மாள், சின்னசேலம் தீயணைப்பு அலுவலர் பரமசிவம் தலைமையிலான, 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்து, மாலை 3:30 மணிக்கு தீயை போராடி அணைத்தனர்.
தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மூல பொருட்கள் எரிந்து சேதமானது. அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படவில்லை.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும்
-
அப்பாவி மக்களை கொன்றவர்களை ராணுவம் அழித்துள்ளது: ராஜ்நாத் சிங்
-
சி.பி.ஐ., இயக்குநர் பிரவீன் சூட் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு
-
இந்திய படைகளுக்கு காங்., முழு ஆதரவு: ராகுல் பேட்டி
-
'ஆபரேஷன் சிந்துார்' குறித்து இந்திய ராணுவம் சொன்ன 10 முக்கிய விஷயங்கள் இவை தான்!
-
எல்லையில் பதற்றம்; மும்பை - பஞ்சாப் லீக் போட்டி மாற்றம்
-
பாக்., தாக்கினால் உரிய பதிலடி தரப்படும்: தோவல் உறுதி