வீரபாண்டியில் தேரோட்டத்திற்கு தயாராகும் 30 அடி உயர தேர்

தேனி : வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டத்திற்காக தேர் தயார்படுத்தும் பணிகள் நடந்தது.
இக்கோயில் சித்திரை திருவிழா மே 6ல் துவங்கி 13 வரை நடக்க உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 9 மாலை துவங்குகிறது. 2004ல் கோயிலில் பழைய தேர் புனரமைக்கப்பட்டு, புதிதாக ரூ.16 லட்சம் மதிப்பில் 30 அடி உயர தேர் கட்டமைக்கப்பட்டது. திருவிழா பராமரிப்பிற்காக தேரடி நிலையில் இருந்த தேர் நகர்த்தப்பட்டு, சுத்தம் செய்யும் பணிகள் நடக்கிறது. நேற்று அனைத்து சிற்பங்களுக்கும் வார்னீஸ்' அடிக்கப்பட்டு, தேர் துாண் இரும்பு உலோகம்பொறுத்தப்பட்டு பணிகள் முடிந்து தயார் நிலையில் வைக்கப்பட்டது. அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமிமாலா, கோயில் செயல் அலுவலர் நாராயணி, மேலாளர் பாலசுப்பிரமணியன், அதிகாரிகள் மேற்பார்வையில் இப்பணிகள் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அப்பாவி மக்களை கொன்றவர்களை ராணுவம் அழித்துள்ளது: ராஜ்நாத் சிங்
-
சி.பி.ஐ., இயக்குநர் பிரவீன் சூட் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு
-
இந்திய படைகளுக்கு காங்., முழு ஆதரவு: ராகுல் பேட்டி
-
'ஆபரேஷன் சிந்துார்' குறித்து இந்திய ராணுவம் சொன்ன 10 முக்கிய விஷயங்கள் இவை தான்!
-
எல்லையில் பதற்றம்; மும்பை - பஞ்சாப் லீக் போட்டி மாற்றம்
-
பாக்., தாக்கினால் உரிய பதிலடி தரப்படும்: தோவல் உறுதி
Advertisement
Advertisement