பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் காலிஸ்தான் ஆதரவு கும்பல் கைகோர்ப்பு

10

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்- -இ-- தொய்பாவின் பினாமி அமைப்பான, 'ரெசிஸ்டன்ஸ் ப்ரன்ட் (டி.ஆர்.எப்), முதலில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு தானாகவே முன்வந்து பொறுப்பேற்றது.

பின்னர், விசாரணையில் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முஹமது ஆகிய பல்வேறு அமைப்புகளுடன், பாக்., ராணுவம், ஐ.எஸ்.ஐ., இணைந்து இந்த சதிச்செயலை செய்தது அம்பலமானது.

படுகொலையின் பின்னணியில் உள்ள பயங்கரவாதி, பாக்., ராணுவத்தின் சிறப்புப் படையின் முன்னாள் பாரா கமாண்டோ என உறுதி செய்யப்பட்டது.

பாகிஸ்தானைச் சேர்ந்த காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்விந்தர் சிங் என்கிற ரிண்டாவுக்கும், இந்த கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

இன்னொரு வழக்கு தொடர்பாகவும், பஞ்சாப் மாநிலத்தில் பல இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.,) சோதனை நடத்தியது.

இந்த சோதனையில், மொபைல் போன்கள், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் ஆவணங்கள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

Advertisement