எக்கோகிராம் எடுக்க டாக்டர்கள் இல்லை 

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை இதயநோய் பிரிவில் எக்கோகிராம் எடுப்பதற்கு டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உள் நோயாளிகளாக800 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

புற நோயாளிகளாக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்வேறு சிறப்பு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

இதய சிகிச்சை பிரிவில் நோயாளிகளின் இதய பரிசோதனை செய்ய இ.சி.ஜி., எக்கோ கிராம் எடுத்து பார்த்த பிறகே டாக்டர்கள் இதய நோய் குறித்த முழு விபரங்களும் தெரிந்து அதற்குரிய சிகிச்சை அளிக்கின்றனர். எக்கோகிராம் எடுக்க டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதனால் எக்கோகிராம் எடுப்பதற்கும் தாமதம் ஏற்படுகிறது. இதய நோய் பிரிவில் ஒரே ஒரு டாக்டர் மட்டுமே இருப்பதால் எக்கோகிராம் எடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

இருக்கும் ஒரு டாக்டரும் விடுமுறை எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

நோயாளிகள் இதய பாதிப்பில் இருப்பவர்கள் உடனடியாக உரிய சிகிச்சை வழங்கினால் மட்டுமே அவர்களை காப்பாற்ற முடியும்.

இதய நோய் பிரிவில் அதிகளவு டாக்டர்களை நியமித்து எக்கோகிராம் விரைந்து எடுப்பதற்கான நடவடிக்கையை அரசு மருத்துவக்கல்லுாரி நிர்வாகம் எடுக்க வேண்டும்.

Advertisement