மானாமதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் மரங்கள் வெட்டி அகற்றம்

மானாமதுரை : மானாமதுரை அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் இருந்த பழமையான மரங்கள் கட்டடம் கட்டுவதாக கூறி வெட்டப்பட்டதால் இயற்கை ஆர்வலர்கள் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.
மானாமதுரை அரசு மருத்துவமனை கட்டடங்கள் கட்டப்பட்டு 40 வருடங்களுக்கும் மேலாகிவிட்டதால் தற்போது கட்டடங்கள் ஆங்காங்கே சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.3.50 கோடி செலவில் புதிதாக கூடுதல் கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இக்கட்டடங்கள் கட்டுவதற்கு மருத்துவமனை வளாகத்திற்குள் போதிய இடம் இருந்தும், பழமையான மரங்கள் இருந்த இடத்திலும், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனைக்கு வருபவர்கள் பயன்படுத்தும் இடத்தையும் தேர்வு செய்து கட்டடங்கள் கட்டுவதற்காக பூமி பூஜை நடத்தப்பட்டது.
நேற்று முன்தினம் முதல் மருத்துவமனை வளாகத்திற்குள் இருந்த பழமையான வேப்ப மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது.
மேலும்
-
எல்லையில் பதற்றம்; மும்பை - பஞ்சாப் லீக் போட்டி மாற்றம்
-
பாக்., தாக்கினால் உரிய பதிலடி தரப்படும்: தோவல் உறுதி
-
'ஆபரேஷன் சிந்தூர்' எதிரொலி; 18 விமான நிலையங்கள் மூடல்; 200 விமான சேவைகள் ரத்து
-
பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்ததால் பாக்., மீது இந்தியா நடவடிக்கை: காந்தி கொள்ளுப்பேரன்
-
ஆபரேஷன் சிந்துார்: என்ன சொல்கிறார்கள் சர்வதேச தலைவர்கள்?
-
பாக்., அத்துமீறலில் காஷ்மீரில் குருத்வாரா சேதம்