மர்ம நபர் பைக் திருடும் வீடியோ வைரலால் பரபரப்பு

காட்டுமன்னார்கோவில் : வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கை மர்ம நபர் திருடிச் செல்லும் வீடியோ காட்சி வைரலாகி பரபர்பை ஏற்படுத்தி வருகிறது.

காட்டுமன்னார்கோவில் பெரியார் நகரை சேர்ந்தவர் பால்வண்ணன்,43; முடித்திருத்தும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் வெளியே பைக்கை நிறுத்தினார். மறுநாள் காலையில் பார்த்த போது, பைக்கை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது, மர்ம நபர் கைலி அணிந்து, பைக்கை திருடிச் செல்லும் காட்சி பதிவானது தெரிந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், காட்டுமன்னார்கோவில் போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் மர்ம நபரை தேடி வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement