இதே நாளில் அன்று

மே 5, 1903 -
திருப்பூரில், சுப்பிரமணிய செட்டியார் -- பழனியம்மாள் தம்பதியின் மகனாக, 1903ல், இதே நாளில் பிறந்தவர் அவிநாசிலிங்கம்.
திருப்பூர், கோவையில் பள்ளிப் படிப்பு, சென்னை பச்சையப்பன், சட்டக் கல்லுாரிகளில் பட்டப் படிப்புகளை முடித்த இவர், ராமலிங்கம் செட்டியாரிடம் பயிற்சி பெற்று வழக்கறிஞரானார். விடுதலை போராட்டங்களில் பங்கேற்றவர், கோவை மாவட்ட காங்கிரஸ் தலைவரானார்.
தமிழகம் வந்த காந்தியிடம், பட்டியலின மக்கள் நல்வாழ்வுக்காக, 2.50 லட்சம் ரூபாய் நிதி அளித்தார். 1946ல், தமிழகத்தின் சட்ட மேல்சபைக்கு தேர்வானார். சென்னை மாகாண முதல்வர்களான, டி.பிரகாசம், ஓமந்துார் ராமசாமி ரெட்டியார் அமைச்சரவையில் கல்வி அமைச்சராகி, உயர்நிலைப் பள்ளிகளில் தமிழை பயிற்று மொழி ஆக்கியதுடன், ஆறாம் வகுப்புக்குப் பின், திருக்குறளையும் கட்டாயமாக்கினார்.
தமிழ் வளர்ச்சி கழகம், பெண்கள் கல்வி, முதியோர் கல்வி திட்டங்களுக்கு முன்னோடியாக இருந்தார். தமிழக நுாலகங்களை சீரமைத்தார். பாரதியாரின் பாடல்களை தேசியமயமாக்கினார். 'பத்ம பூஷன், ஜி.டி.பிர்லா' உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், தன் 88வது வயதில், 1991, நவம்பர் 21ல் மறைந்தார்.
அவிநாசிலிங்கம் நிகர்நிலை பல்கலை நிறுவனர் பிறந்த தினம் இன்று!
மேலும்
-
காட்டெருமையை சுட்டுக்கொன்ற 2 பேர் சிக்கினர்
-
புதுவை பக்தர்கள் ராஜஸ்தானில் சிறைபிடிப்பு
-
ரூ.90 லட்சம் மோசடி புகார் 'மாஜி' பஞ்., தலைவர் மீது வழக்கு
-
குமரி கண்ணாடி நடைபாலம் உறுதியாக உள்ளது: வேலு
-
தமிழகத்தில் 'நீட்' தேர்வு 1.50 லட்சம் பேர் பங்கேற்பு
-
மத்திய அமைச்சர் நட்டாவுக்கு பழுதடைந்த வாகனம்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு