முஸ்லீம்களிடம் வன்முறையை தூண்டுவதா: தி.மு.க., மீது வேலூர் இப்ராஹிம் தாக்கு

2

சென்னை: வக்பு சட்டத்தை முன்னிறுத்தி முஸ்லீம்களிடம் தி.மு.க.,வன்முறையை தூண்டுவதாக வேலூர் இப்ராஹிம் குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரையில் நடந்த கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது, ‛ இரு நாட்களுக்கு முன்பு நடந்த பொதுக் கூட்டத்தில் தி.மு.க., எம்.பி ராசா பேசினார். அவர் என்ன பேசினார் என்றால், இந்த வக்பு சொத்துக்களை முஸ்லீம்களிடமிருந்து பிடுங்கி அதை மாவட்ட கலெக்டர் கையில் வைத்துக் கொண்டிருப்பார். அந்த இடங்களை ஹிந்துக்கள் அபகரித்து கோவில்களை கட்டி விடுவார்கள். இதை முஸ்லீம்களாகிய நீங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கப் போகிறீர்களா என்று கேட்கிறார். ஆ.ராசா என்ற அருவெறுப்பு மிக்க மனிதர் முஸ்லீம்களிடையே வன்முறையை தூண்டுகிறார். இந்த பேச்சினை போலீசாரும் கண்டுகொள்ளாமல் கைகட்டி வேடிக்கை பார்த்தனர். இது காவல் துறையா அல்லது ஏவல் துறையா என்று தெரியவில்லை.

தமிழக முதல்வர் ஸ்டாலினின் தங்கை கனிமொழி அவர்கள் திருவாரூரில் நடந்த கூட்டத்தில் பேசிய போது, தமிழகத்தில் முஸ்லீம்களிடையே புரட்சி வெடிக்கும். முஸ்லீம்கள் வக்பு சட்டத்தை எதிர்க்க வேண்டும். நீங்கள் என்ன செய்தாலும் அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று வெளிப்படையாக தமிழகத்தில் கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்தில் பேசினார். அப்போதும் கனிமொழி பேச்சினை காவல்துறை வேடிக்கை பார்த்தது.

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாமளவன் இன்னொரு கூடடத்தில் பேசியபோது, வக்பு சொத்தை அபகரித்து அதை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கத்தான் இந்த சதி நடக்கிறது. முஸ்லீம்கள் அனைவரும் போராடத் தயாராகுங்கள் என்று பேசியுள்ளார். அதற்கடுத்து எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக் பேசிய போது, தமிழகத்தில் வக்பு சட்ட திருத்தை கொண்டு வந்தால் இரண்டாவது யுத்தம் வெடிக்கும். தமிழகத்தில் முஸ்லீம்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பேசி வருகிறார்கள்' இவ்வாறு வேலூர் இப்ராஹிம் பேசினார்

Advertisement