சங்கராபுரம் அருகே தீ விபத்து ரூ.7 லட்சம் பொருட்கள் சேதம்

சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே பேக்கரி மற்றும் டயர் கடையில் தீ பிடித்து எரிந்ததில் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 50; இவர் சங்கராபுரம் - தேவபாண்டலம் சாலையில், தகர ெஷட் அமைத்து பேக்கரி கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன் தினம் இரவு 10:00 மணிக்கு கடையை முடிவிட்டு முருகன் வீட்டிற்கு சென்றுள்ளார். நள்ளிரவு 12:00 மணி அளவில் கடையினுள் திடீரென தீ பிடித்து எரியத் துவங்கியது.
அப்போது காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென பரவி பக்கத்தில், தேவபாண்டலத்தைச் சேர்ந்த சக்திவேல், 52; என்பவருக்கு சொந்தமான டயர் ரீடிரேடிங் கடையிலும் தீ பிடித்தது.
தகவலறிந்து வந்த சங்கராபுரம் மற்றும் கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்தினர் 4 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் பேக்கரி கடையில் இருந்த டேபிள்கள், சேர், பிரிட்ஜ் உட்பட 5 லட்சம் ரூபாய் மதிப்பிலும், டயர் கடையில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலும் பொருட்கள் எரிந்து சேதமானது.
சங்கராபுரம் போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார்
-
செங்கோட்டை மட்டும் போதுமா? பதேபூர் சிக்ரி வேண்டாமா? பேராசை பெண்ணுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
-
சாலை பள்ளத்தில் தம்பதி பலியான விவகாரம்; ஒப்பந்ததாரர் 4 பேர் மீது வழக்கு
-
ஹிந்துக்கள் வெளியேற கனடாவில் காலிஸ்தான் பேரணி ; மோடியை கேலி செய்து சித்திரம்
-
சகாயத்துக்கு ஏன் பாதுகாப்பு வழங்கவில்லை: ஐகோர்ட் மதுரை கிளை தமிழக அரசுக்கு கேள்வி
-
வீடுகளை சேதப்படுத்தும் காட்டு யானை: கிராம மக்கள் ஆவேச மறியல்