உண்டியல் திருட்டு

உளுந்துார்பேட்டை,; உளுந்துார்பேட்டை அருகே கோவில் உண்டியலை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

உளுந்துார்பேட்டை தாலுகா, மதியனுார் கிராமத்தில் ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று, காணிக்கை உண்டியலை திருடி சென்றனர்.

சிறிது துாரம் சென்று அதை உடைத்த போது, பணம் இல்லாமல் இருந்தது தெரிந்தது. தொடர்ந்து அருகில் இருந்த வயல் வெளியில் உண்டியலை வீசி தப்பி சென்றனர்.

உளுந்துார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement