கண் சிகிச்சை முகாம்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச்சங்கம் சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடந்தது.

ரோட்டரி நூற்றாண்டு மண்டபத்தில் நடந்த முகாமிற்கு, தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

மாவட்ட துணை ஆளுனர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். முகாமிற்கு நிதி அளித்து உதவிய பாரதி கல்வி நிறுவன தாளாளர் கந்தசாமி, முத்துக்குமரன் மாடர்ன் ரைஸ்மில் உரிமையாளர் அன்பழகன் ஆகியோருக்கு மரியாதை செய்யப்பட்டது.

கோவை சங்கரா கண் மருத்துவமனை டாக்டர்கள் ஐஸ்வர்யா, லட்சுமி ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை செய்தனர். முகாமில், 370 பேர் கலந்து கொண்டனர்.

இதில் அறுவை சிகிச்சைக்கு தேர்வான, 117 பேர் கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

ரோட்டரி இயக்குனர் அம்பேத்கர், செயலாளர் சிவக்குமார், முன்னாள் தலைவர்கள் பெருமாள், துவாரகா, ஞானராஜ், இம்மானுவேல் சசிகுமார், நிர்வாகிகள் சேகர், அரவிந்தன், ராஜா, பாலசுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பொருளாளர் பாபு நன்றி கூறினார்.

Advertisement