பல்லடத்திலிருந்து உக்கடத்துக்கு பஸ் இயக்க கோரிக்கை
சூலுார்; ''பல்லடத்தில் இருந்து கரடிவாவி, பாப்பம்பட்டி, செட்டிபாளையம் வழியாக உக்கடத்துக்கு பஸ்கள் இயக்க வேண்டும்,''என, பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
போக்குவரத்து துறை அமைச்சரிடம், அவர் அளித்த மனு விபரம்:
பல்லடம் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, தினமும் ஏராளமான தொழிலாளர்கள் வேலைக்கும், மாணவ, மாணவியர் கல்லுாரிகளுக்கும் செல்கின்றனர். போதிய பஸ் வசதி இல்லாததால், பல கிராம மக்கள் அவதிக்குள்ளாகி யுள்ளனர்.
எனவே, பல்லடத்தில் இருந்து சின்னியகவுண்டன்பாளையம், கே. அய்யம்பாளையம், கரடிவாவி, செலக்கரச்சல், பாப்பம்பட்டி, செட்டிபாளையம், போத்தனுார், குறிச்சி வழியாக உக்கடம் மற்றும் காந்திபுரம் செல்லும் வகையில் அரசு பஸ்களை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!
-
மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு வட மாநில இளைஞர் கைது
-
ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா: நாளை திக் விஜயம்
-
குளத்துக்கரையில் உயிருக்கு போராடிய பசுவிற்கு சிகிச்சை
Advertisement
Advertisement